முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்பன் விமர்சனம்

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

மாநாடு பாணியில் வந்திருக்கும் மற்றொரு படம் கார்பன். ஒருவருக்கு கனவில் தோன்றும் காட்சிகள் நிஜத்திலும் நடந்தால் எப்படி இருக்கும் நல்லது நடந்தால் சரி. ஆனால் கெட்டது நடந்தால் இந்தக் கருவைக் கற்பனையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் தான் ‘கார்பன்’. நாயகன் விதார்த்துக்கு இது இருபத்தைந்தாவது படம். விதார்த்தை அப்பா தண்டச்சோறு என்று திட்டியதால் வேலைக்குச் சென்று முதல் மாத சம்பளம் வாங்கிய பிறகுதான் அப்பாவிடம் பேசுவேன் என்று வைராக்கிய மகனாகவும் குற்றவாளிகளைப் பிடிக்க புத்திசாலி இளைஞனாகவும் நன்றாக நடித்திருக்கிறார். நாயகி ஸ்வப்னாவின் வேடம் வித்தியாசமானது. டூயட் பாடி காதலிப்பதுடன் வில்லியாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். விவேகானந்த் சந்தோசம் ஒளிப்பதிவு படத்தின் கதைக்களத்தோடு இணைந்திருக்கிறது. சாம்.சி.எஸ்ஸின் இசையில் பாடல்கள் , பின்னணி இசை சிறப்பு. கார்பனை எழுதி இயக்கியிருகும் ஆர்.சீனுவாசன்,நல்லதொரு கதைக்களத்தில் குறைவான பட்ஜெட்டில் நிறைவான படைப்பைக் கொடுத்திருக்கிறார். அம்மாவை ஈடுசெய்ய மனைவி வருவார் ஆனால் அப்பாவுக்கு இணையாக வாழ்வில் யாரும் வரமாட்டார்கள் என்பது உட்பட பல நல்ல வசனங்களை எழுதி பாராட்டு பெறுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து