முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐகோர்ட் வளாகத்தில் சட்ட அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சட்ட அலுவலர்களின் கட்டிடத்தில் தூய்மைப்பணி  மேற்கொள்வதற்காக  தகுதி வாய்ந்த  நிறுவனங்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 இது குறித்து மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

சென்னை, ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சட்ட அலுவலர்களின் கட்டிடத்தில்,  மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர் அலுவலகம், மாநில அரசு குற்றவியல் அலுவலகம், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகங்கள் உட்பட பல சட்ட அலுவலர்களின் அலுவலகங்கள்  இயங்கி வருகின்றன. அக்கட்டிடம் முழுமைக்கும் தூய்மைப்பணி மேற்கொள்ள தகுதிவாய்ந்த முன்அனுபவமுள்ள தூய்மைப் பணி மேற்கொள்ளும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் வரவேற்கப்படுகின்றன. 

 

மேலும் இவ்வலுவலகத்தின் 06/01/2022 தேதியிட்ட அறிக்கையின்படி, கட்டிடத்தைப் பார்வையிட  21/01/2022-ம் தேதி வரை அலுவலகப் பணி நாட்களில் விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் 04/02/2022 அன்று மாலை 5.45 மணிக்குள் மூடி முத்திரையிடப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி, மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர், சட்ட அலுவலர்கள் கட்டிடம், உயர்நீதிமன்றம், சென்னை-600104. விண்ணப்ப உறை மேல் அலுவலகத் தூய்மைப் பணிக்காக எனக் குறிப்பிடவும். மேலும் விவரங்களுக்கு 044-25341024 என்ற அலுவலகத் தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்  என அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து