முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் புதிதாக 2,446 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் புதிய உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் அதன் தாக்கம் விட்டு வைக்கவில்லை. இதனிடையே, புதுச்சேரியில் புதிதாக 2,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் நேற்று (ஜன. 22) வெளியிட்டுள்ள தகவலில், "புதுச்சேரி மாநிலத்தில் 5,221 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 1,870 பேருக்கும், காரைக்காலில் 470 பேருக்கும், ஏனாமில் 83 பேருக்கும், மாஹேயில் 23 பேருக்கும் என மொத்தம் 2,446 பேருக்கு (46.85 சதவீதம்) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 316 ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 146 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 14,922 பேரும் என மொத்தம் 15,068 பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,901 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 88.71 சதவீதமாக உள்ளது.

புதிதாக1,479 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 347 (88.71 சதவீதம்) ஆக அதிகரித்தது. இதுவரை 15 லட்சத்து 18 ஆயிரத்து 541 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து