முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி பாதிப்பு சற்று உயர்வு: இந்தியாவில் புதிதாக 2,86,384 பேருக்கு தொற்று

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் 2,86,384 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,06,357பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து நேற்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,86,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 573 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் தொற்றில் இருந்து 3,06,357 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 22,02,472 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  நாடு முழுவதும் நேற்று வரை 1,63,84,39,207 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

  •  கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,86,384.
  •  கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,06,357.
  •  தினசரி நேர்மறை விகிதம்: 19.59%.
  •  கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 573.
  •  சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 22,02,472.
  •  சிகிச்சையில் உள்ளோர் விகிதம்: 5.46%.
  •  இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,63,84,39,207.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து