முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனியின் இடத்தை நிரப்புவது எளிதல்ல: விராட் கோலிக்கு சில மாதம் ஓய்வு அவசியம் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை: டோனி விட்டு சென்ற இடத்தை நிரப்புவது எளிதல்ல. ஆனால் கோலி விரைவாக தலைமை பொறுப்பை எடுத்துகொண்டு டெஸ்ட் அணியை சிறப்பாக வழி நடத்தினார் என தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அவருக்கு 2 முதல் 3 மாதங்கள் ஓய்வு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சை - விமர்சனம்...

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்து அவரை குறித்து சர்ச்சைகளும், விமர்சனங்களும் தொடர்ந்து எழுகின்றன. விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதற்கு அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தரும் அழுத்தமே காரணம் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி கண்டிப்பாக 2-3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இன்னும் 5 வருடங்கள்... 

இதுகுறித்து அவர் கூறியதாவது., விராட் கோலிக்கு 33 வயது தான் ஆகிறது. அவர் இன்னும் 5 வருடங்கள் நல்ல கிரிக்கெட் வீரராக வலம் வரலாம். அவர் வெளியே வரும் பிரச்சனைகளை மறந்துவிட்டு, அமைதியுடன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். அவர் போட்டிகளில் இருந்து 2-3 மாதங்கள் ஓய்வு எடுத்து வந்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நான் கருதுகிறேன். 

சிறப்பாக நடத்தினார்...

விராட் கோலி 3-4 வருடங்களுக்கு அரசரை போன்று இருப்பார். அவரால் அணிக்கு வெற்றியை தேடி தர முடியும். அதுபோன்ற கோலியை தான் நான் காண விரும்புகிறேன். டோனி விட்டு சென்ற இடத்தை நிரப்புவது எளிதல்ல. கோலி விரைவாக தலைமை பொறுப்பை எடுத்துகொண்டார். டெஸ்ட் அணியையும் சிறப்பாக வழி நடத்தினார். இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து