முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாயம் விமர்சனம்

சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

விஜய் விஷ்வா  நாயகனாக நடித்திருக்கும் படம் சாயம். இப்படத்தை இயக்கியும் படத்தில் வில்லனாகவும் நடித்திருப்பவர் ஆண்டனி சாமி. ஒயிட் லேம்ப் புரடக்‌ஷன் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஷைனி, பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா,  இளவரசு  உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கதை – ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்களான விஜய் விஷ்வாவும் ராசைய்யாவும் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் விஜய் விஷ்வாவின் முறைப்பெண்ணுடன் ராசைய்யா தனியாக பேசுவதை பார்த்து அவரைக் விஜய் விஷ்வா கண்டிக்கிறார். இதனால் இருவருக்கும் உருவான கை கலப்பில் எதிர்பாராமல் ராசைய்யா  இறந்து போகிறார். இதனால் கொலை பழி விஜய் மீது விழுகிறது. இதன் முடிவு என்ன  என்பதற்கு கிளைமாக்ஸ் அதிர்ச்சியுடன் பதில் அளிக்கிறது. விஜய் விஷ்வா முதல் பாதிவரை சக மாணவரைப் போலவும் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் மிரள வைக்கும் ரவுடியாகவும் மிரட்டியுள்ளார். இவரது பெற்றோராக வரும் பொன்வண்ணனும்,  சீதாவும் நடித்து அசத்தியுள்ளனர். நாகா உதயன் இசையில் பாடல்கள் இதமாக ஒலிக்கிறது. கிரிஸ்ட்டோபர், சலீம் ஒளிப்பதிவு படத்துக்கு வலு சேர்க்கிறது. மொத்தத்தில் இந்த சாயம் படம் சமுதாயத்திற்கான விழிப்புணர்வுப் பாடம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!