முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீகாந்த்தை டார்ச்சர் செய்த இயக்குநர்

சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன்  ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் தி பெட். வெத்துவேட்டு படத்தை இயக்கிய மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாகவும்,  சிருஷ்டி டாங்கே நாயகியாகவும் நடித்துள்ளனர். தாஜ்நூர் இசையமைத்துள்ள இப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் நாயகன் ஸ்ரீகாந்த் பேசும்போது, படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுமே ஒளிப்பதிவாளரை நான் சிபாரிசு செய்யலாமா எனக் கேட்டேன்.. ஏற்கனவே கோகுல் என்பவரை ஒப்பந்தம் செய்து விட்டேன் என்று இயக்குநர் மணிபாரதி கூறினார்.. ஒருவரை பற்றி தெரியாமல் அவரது திறமையை எடைபோடுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை கோகுல் எனக்கு உணர்த்தினார் அந்த அளவுக்கு அற்புதமாக காட்சிகளை படமாக்கியுள்ளார் என்று நெகிழ்ச்சியாக கூறினார்.  இயக்குநர் மணிபாரதி பேசும்போது, ஸ்ரீகாந்த்தை கன்வின்ஸ் செய்து படப்பிடிப்பை நடத்தி முடித்தேன்.. ஒரு வசனத்தைக் கூட மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை. அந்த வகையில் அவரை நான் நிறையவே டார்ச்சர் செய்து இருக்கிறேன்.. அதற்காக அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து