முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரவாயல் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பென்ஜமின் பிரச்சாரம்

வியாழக்கிழமை, 17 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுராவயல் தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் வாக்கு சேகரித்தார். 

 

நகர் புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறுகிறது.இதனையொட்டி மதுராவயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 91,92, மற்றும் 143 முதல் 155 வரை வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளர் பா.பென்ஜமின் பொது மக்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது பா.பென்ஜமின் பேசும் போது கடந்த 10 ஆண்டு ஜெயலலிதா அரசு செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தார்.அது மட்டும் அல்லாமல் அவர் மாநகராட்சி துணை மேயராக இருந்த நேரத்தில் அவர் ஆற்றிய பணிகள் மற்றும் ஜெயலலிதா அரசின் செய்த சாதனை களை சொல்லி பொது மக்களிடம் ஆதரவு திரட்டினார். மேலும் கடந்த 9 மாதத்தில் திமுக அரசின் செய்ய தவறிய தவறுகளை சுட்டிக்காட்டினார். குறிப்பாக திமுக அரசு தேர்தல் வாக்குறிதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கூறினார். வருகிற மாநகராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு உங்களின் பொண்னான வாக்குகள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்கும் படி ஆதரவு திரட்டினார். இந்த பிரசாரத்தின் போது பகுதி செயலாளர்கள் ஏ.தேவதாஸ், இமானுவேல், தாமோதரன், காரம்பாக்கம் கந்தன், மூத்த நிர்வாகிகள் கா.சு.ஜனார்த்தனம், புலவர் ரேஜா, மற்றும் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து