முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 வருட வாழ்க்கை முடிவுக்கு வந்தது: இயக்குனர் பாலா மனைவியை பிரிந்தார்

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

இயக்குனர் பாலா தனது மனைவி முத்து மலரை சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் 'சேது', 'நந்தா', 'பிதாமகன்' தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கியவர். இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார். தற்போது மீண்டும் பாலா - சூர்யா கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது. 'நந்தா', 'பிதாமகன்' படங்களுக்குப் பிறகு பாலா - சூர்யா கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குனர் பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில், தற்போது இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்தார்கள். இயக்குனர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 18 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து