முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதனை படைத்த 3.6.9.

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2022      சினிமா
Bhagyaraj 2022-04-23

Source: provided

பாக்யராஜ் நாயகனாக நடித்து விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘3.6.9’. பி.ஜி.எஸ் சரவணகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தை சிவமாதவ் இயக்கியிருக்கிறார். 81 நிமிடங்கள் மட்டுமே படமாக்கப்பட்டு அன்கட்டாக உருவாகியுள்ள இந்த 3.6.9 படம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாக்யராஜ், ஹீரோவாக நடித்து “ 21 வருடம் ஆச்சு என்று சொல்லி என்னை சங்கடப்படுத்தி விட்டார்கள். நான் எப்போதும் ஹீரோதான். இதுவரை நான் கிறிஸ்தவர் கெட்டப் போட்டதில்லை. இந்தப் படத்தில்தான் முதல் முறையாக போட்டிருக்கிறேன். இப்படம் சயின்ஸ் பிக்சன் என்றார்கள். இவர்கள் திட்டமிட்டது எல்லாம் பார்க்க பிரமிப்பாக இருந்தது. படம் மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்தார்கள். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!