முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேற்றுக் கிரகவாசிகளை கவர நாசாவின் பிரத்யேக திட்டம் : மனிதர்களின் நிர்வாண புகைப்படங்களை அனுப்புகிறது

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      உலகம்
NASA 2022 05 06

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் நாசா  பீகன் இன் தி கேலக்சி  என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. வேற்றுக்கிரகவாசிகள் உடன்  தொடர்பை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தற்போது இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஆண் மற்றும் பெண் மனிதர்களின்  நிர்வாண படங்களை விண்வெளியில் ஒளிர செய்து வேற்று கிரக வாசிகளை கவரும் முயற்சியில் நாசா ஈடுபடவுள்ளது.

கணிதத்தில் உள்ள பைனரி குறியீடுகள் உடன் இந்த புகைப்படங்களை நாசா வடிவமைத்துள்ளது. இந்த குறியீடுகள் வேற்று கிரக வாசிகளுக்கு புரியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? என்பது போன்ற எண்ணற்ற கேள்விகள் எழுவது உண்டு. 

பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.  வேற்றுகிரக வாசிகள் இருப்பது குறித்து பல்வேறு ஆராச்சியாளர்கள் பல வருடங்களாக ஆராச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாசாவின் புதிய திட்டம் கைகூடுமா என்பது ஆராய்ச்சியின் முடிவில் தெரியவரும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!