முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என்னைக்கொல்ல சதி நடக்கிறது : இம்ரான்கான் சொல்கிறார்

திங்கட்கிழமை, 16 மே 2022      உலகம்
Imran-Khan 2022 02 08

Source: provided

இஸ்லாமாபாத் : உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என்னைக்கொல்ல சதி நடக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புலம்பி இருக்கிறார்.

பாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது  அப்போதைய பிரதமர் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. தனது அரசை கவிழ்த்ததின்  பின்னணியில், அமெரிக்கா உள்ளதாக கூறினார். தற்போது அவர் பாகிஸ்தானின்  பல்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்தி வருகிறார்.

அதேநேரம் புதிய அரசு  குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ‘பாகிஸ்தானிலும், வெளிநாடுகளிலும் என்னைக் கொல்ல சதி நடக்கிறது.

இந்த சதி குறித்து எனக்கு முன்பே தெரியும். இதுதொடர்பாக வீடியோ பதிவும் வைத்துள்ளேன். அதில் சதியின் பின்னணியில் உள்ள அனைவரின் பெயர்களையும் தெரிவித்துள்ளேன். நான் இறந்த பின்னர், இந்த வீடியோ வெளி உலகிற்கு பகிரங்கப்படுத்தப்படும்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!