முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான பணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்? - டுவிட்டரில் எலான் மாஸ்க் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      உலகம்
Elon-Musk 2022 05 09

Source: provided

வாஷிங்டன் : உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு அவர் தனி விமானத்தில் பறந்த போது அங்கு இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அந்த தவறை மறைப்பதற்காக 2018-ம் ஆண்டு எலான் மாஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 1.93 கோடி ரூபாய் தொகையும் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்த செய்தியை எலான் மாஸ்க் மறுத்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர் கூறியிருப்பதாவது, 

நாம் கருத்து சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். அதில் ஒருபகுதியாக பைடன் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகிறேன். இதனால் என்மீது அரசியல் ரீதியான தாகுதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. 

ஆனால் இந்த அவதூறுகள் எல்லாம் என்னை சிறந்த எதிர்காலத்திற்காக போராடுவதில் இருந்தும், சுதந்திர பேச்சு உரிமை குறித்து பேசுவதில் இருந்தும் தடுக்க முடியாது. எழுதி வைத்து கொள்ளுங்கள். என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை.  இவ்வாறு எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து