Idhayam Matrimony

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      உலகம்
Sri-Lanka 2022-05-24

Source: provided

கொழும்பு : இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதனால் அரசுக்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உணவுப் பஞ்சத்தால் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த பலர் அகதிகளாக தமிழகத்துக்கு வரத் தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில், இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிகோணமலை சல்லி கடற்பகுதியில் 67 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து