Idhayam Matrimony

தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க நடவடிக்கை: அறிகுறிகள் உள்ளவர்களை தெரிவிக்குமாறு உத்தரவு : மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் சுற்றறிக்கை

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
Radhakrishnan 2021 07 03

Source: provided

சென்னை : தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக அறிகுறிகள் உள்ளவர்களை தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார். ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியதையடுத்து, தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றவர்களை உரிய முறையில் பரிசோதனை செய்ய மாவட்ட மருத்துவ அலுவலர்களுடன் இணைந்து, நோய் பரவாமல் விழிப்புடன் இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தனது சுற்றறிக்கையில், குழந்தைகள் உள்பட மக்களின் உடலில் விவரிக்க முடியாத தடிப்பு ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருக்குமாறு ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் உள்ளவர்களை சுகாதார மையங்களில் தெரிவிக்குமாறு மாநில சுகாதார செயலாளர் மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  ரத்தம், சளி, மற்றும் வெசிகல்ஸ் திரவம் அடங்கிய ஆய்வக மாதிரிகளை தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்புமாறு மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து