முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாபில் பா.ஜ.க. வில் இணைந்த 4 காங். முன்னாள் அமைச்சா்கள்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2022      இந்தியா
BJP 2022 03 20

Source: provided

அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சா்களான ராஜ்குமாா் வா்கா, பல்பீா் சிங் சித்து, சுந்தா் ஷாம் அரோரா, குா்பிரீத் சிங் கங்கா் ஆகிய நால்வரும் பா.ஜ.க.வில் நேற்று முன்தினம் இணைந்தனர். 

சண்டிகரில் மத்திய அமைச்சா்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், சோம் பிரகாஷ், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அஸ்வினி சா்மா ஆகியோா் முன்னிலையில் அவா்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். 

ராஜ்குமாா் வா்கா, முந்தைய காங்கிரஸ் அரசில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராகவும், பல்பீா் சிங் சித்து சுகாதாரத் துறை அமைச்சராகவும், சுந்தா் ஷாா் அரோரா தொழில்-வா்த்தகத் துறை அமைச்சராகவும், குா்பிரீத் சிங் கங்கா் வருவாய்த் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளனர்.  ஒரே நேரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவா்கள் கட்சி மாறியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 

இவா்களுடன் பல்பீா் சிங் சித்துவின் சகோதாரரும் மொஹாலி மாநகர மேயருமான அமா்ஜித் சிங் சித்து, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. கேவல் சிங் தில்லோன், சிரோமணி அகாலி தள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரூப் சந்த் சிங்லா, மொஹிந்தா் கௌா் ஜோஷ் ஆகியோரும் பா.ஜ.க.வில் இணைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து