Idhayam Matrimony

மேற்கு வங்கத்தை பிரிக்க நினைத்தால்... : முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2022      இந்தியா
Maumta-Banerjee 2022 01 23

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்கத்தை பிரிக்க நினைத்தால், எனது ரத்தத்தை கூட சிந்துவேன் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் பாஜக தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்துகிறது. மேற்கு வங்காளத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத்தேர்துலுக்கு முன்னதாக தனி மாநிலமாக அமைக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தேவைப்பட்டால் அத்தகைய முயற்சிகளை முறியடிக்க தனது சொந்த ரத்தத்தை சிந்தவும் தயார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கட்சி கூட்டத்தில் மம்தா உரையாற்றியபோது கூறியதாவது:- தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் பாஜக தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்துகிறது. சிலர் என்னை மிரட்டுகிறார்கள். நான் கவலைப்படவில்லை. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்படவில்லை. மேற்கு வங்கத்தை பிரிக்க முயற்சித்தால் எனது ரத்தத்தை கூட சிந்துவேன் ஆனால் மாநிலத்தை பிரிக்கவிட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து