முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி சமயபுரம் கோவிலில் ஜூலை 6-ல் கும்பாபிஷேகம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      ஆன்மிகம்
Samayapuram 2022-06-19

Source: provided

சென்னை : திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், கிழக்கு ராஜாகோபுர கும்பாபிஷேகம் ஜூலை 6-ம் தேதி நடக்க உள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.  இதையடுத்து, ஜூலை 6-ம் தேதி கிழக்கு ராஜகோபுர கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ஜூலை 3-ல் யாகசாலை வளர்த்து, விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி, நவக்கிரஹ ஹோமங்கள் துவங்குகின்றன. கும்பாபிஷேக நாளான, ஜூலை 6-ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கிறது.

காலை 6:00 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடக்கிறது. அன்று காலை, 6:45 மணிக்கு மாரியம்மன் ஆலய ராஜகோபுரத்திற்கு, கும்ப நீர் சேர்க்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. யாகசாலை நேரங்களில் வேத, சிவாகம, அபிராமி அந்தாதி முற்றோதல் திருமுறை பாராயணங்கள் நடக்கின்றன.

இவ்விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து