Idhayam Matrimony

கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் கொடுக்க வந்தனர்: த.வெ.க.

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      தமிழகம்
Vijay-2025-09-20

சென்னை, கரூர் விவகாரம் தொடர்பாக சி.சி.டி.வி. உள்ளிட்ட வீடியோ ஆதாரங்களை ஒப்படைக்குமாறு கேட்டுள்ளனர் என த.வெ.க. நிர்வாகி நிர்மல் குமார் கூறினார்.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் பகுதி சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் சென்னை த.வெ.க. அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து த.வெ.க. நிர்வாகி நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கரூர் விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் கொடுக்க த.வெ.க. அலுவலகம் வந்தனர். போட்டோ, சி.சி.டி.வி. ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும்படி சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனர். பரப்புரை வாகனத்தில் இருந்த சி.சி.டி.வி. ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை 3 நாட்களில் தருவோம். எங்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்யவில்லை. சம்மன் கொடுத்தால் விசாரணைக்கு ஆஜராவோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து