முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்றை அடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      இந்தியா
corono-ins2022-06-23

Source: provided

நாடு முழுவதும் நேற்று முன்தினம் 12,249 ஆக இருந்த தொற்று பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,313-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, வியாழக்கிழமை (நேற்று) 24 மணி நேரத்தில் புதிதாக 13,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,33,34,958-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 83,990 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.19 சதவீதமாக உள்ளது. 

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 38 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,24,941 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 10,972 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,27,36,027-ஆக அதிகரித்துள்ளது என்று குணமடைந்தோர் விகிதம் 98.60 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இந்நிலையில், டெல்லியில் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா, ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, தேசிய நோய்த்தடுப்பு மையத்தின் இயக்குநர் சுஜீத் சிங் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், உயிரி தொழில்நுட்பத் துறைச் செயலர் ராஜேஷ் எஸ்.கோகலே உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து