முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதய்பூர் படுகொலை: தையல்காரர் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் முதல்வர் கெலாட்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      இந்தியா
kolaat---2022 06 30

Source: provided

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரர் கன்னையா லாலின் வீட்டிற்குச் சென்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கன்னையா லாலின் குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் அசோக் கெலாட் பேசினார். அசோக் கெலாட், கட்சித் தலைவர் கோவிந்த் சிங், வருவாய்த் துறை அமைச்சர் ராம்லால் ஜத் உள்ளிட்டோருடன் கன்னையா லாலின் வீட்டிக்குச் சென்றார். 

தையல்காரா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உரிய நேரத்துக்குள் விசாரணை நடத்திமுடிக்கவும் படுகொலை சம்பவம் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அசோக் கெலாட் கூறினார். கன்னையா வீட்டுக்கு முதல்வர் வருகை தருவதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வசித்தவா் தையல்காரா் கன்னையா லால். சமூக ஊடகத்தில் இஸ்லாம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பதிவு வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட இவா், கடந்த ஜூன் 15-ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் பேசிய நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உதய்பூரின் தன்மண்டி பகுதியில் உள்ள அவரின் கடைக்கு செவ்வாய்க்கிழமை சென்ற இருவா், கன்னையா லாலை கழுத்தறுத்து கொலை செய்தனா். அந்தக் கொலையை விடியோவாக பதிவு செய்து சமூக ஊடகத்திலும் வெளியிட்டனா். அவா்கள் வெளியிட்ட மற்றொரு காணொலியில், கன்னையா லாலின் தலையை துண்டித்துவிட்டதாகக் கூறியிருந்தனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கன்னையா லால் கொலைச் சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து