முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 2-வது சுற்றில் சானியா ஜோடி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      விளையாட்டு
Sania-Mirza 2022 07 03

Source: provided

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - குரோஷியாவின் மேட் பாவிக் ஜோடி வெற்றி பெற்றுள்ளது. 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் லண்டனில் நடைபெற்று வருகிறது. 

முதல் சுற்றில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா- குரோஷியாவின் மேட் பாவிக் ஜோடி சானியா மிர்சா - பாவிக் ஜோடி 6-4, 3-6, 6(10)-6(3) என்ற செட் கணக்கில் ஜார்ஜியாவின் நடேலா டிசலமிட்சே - ஸ்பெயினின் டேவிட் வேகா ஜோடியை வீழ்த்தியது.

_______________

டி-20 கேப்டன் பதவி: தினேஷ்கார்த்திக் நன்றி

இங்கிலாந்தில் கவுண்டி மற்றும் நார்த்தாம்டன்ஷையர் அணிகளுக்கு எதிரான பயிற்சி டி20 போட்டிகளுக்கு இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பல வருடங்களாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ளேன். 

முதல்முறையாக இந்திய அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இது பயிற்சி போட்டிதான். இருப்பினும் இதில் கேப்டன் பதவி கிடைத்திருப்பதை நினைத்து பெருமையாக உணர்கிறேன். அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

_________________

நியூசி., வீரர் மிட்செலுக்கு கொரோனா தொற்று உறுதி

நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் மிச்சேல் சான்ட்னருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் அயர்லாந்துக்கு சென்று அங்கு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டி20 அணிக்கு கேப்டனாக அந்த அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அயர்லாந்து தொடருக்கான நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஷேன் ஜூர்கென்சன் கூறுகையில், ``சான்ட்னர் தற்போது நலமுடன் இருக்கிறார். அயர்லாந்து தொடருக்கு அவர் அணியில் இணைவது என்பது தற்போது உறுதிப்படுத்த முடியாத ஒன்றாக உள்ளது. அவர் முழுவதுமாக குணமடைந்த பிறகு அணியில் இணைவார்’’ என்றார்.

_____________

இங்கிலாந்தில் சதம் அடிப்பது மிக பெரிய விஷயம்: ஜடேஜா 

இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவிக்கையில்., இங்கு சதம் அடித்ததால் நான் மிகவும் நன்றாக உணர்கிறேன், இந்தியாவுக்கு வெளியே அதைச் செய்வது, குறிப்பாக இங்கிலாந்தில் ஒரு வீரராக சதம் அடிப்பது மிகவும் பெரிய விஷயம், இங்கிலாந்தில் உடலுக்கு நெருக்கமாக விளையாட வேண்டும். பந்து இங்கே ஸ்விங் ஆகிறது, எனவே கவர் அல்லது ஸ்கொயர் டிரைவ் விளையாட விரும்பினால், கார்டனுக்கு எட்ஜ் செய்ய வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அதிக பந்துகளில் விளையாடாமல் இருப்பதில் எனது கவனம் இருந்தது.

அது இங்கு ஒருபோதும் எளிதானது அல்ல. நானும் ரிஷப்பும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம், நாங்கள் ஒரு நீண்ட பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றோம். நான் பேட்டிங் செய்ய வந்தபோது அணியை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது, நாங்கள் ஒரு நல்ல ஸ்கோர் எடுத்துள்ளோம் என்று நம்புகிறேன்.

_______________

இங்கிலாந்து அணியை கலாய்த்த வாசிம் ஜாஃபர்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி பெர்மிங்கம்மில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா சதத்தின் துணையுடன் 416 ரன்களை குவித்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி இந்தியாவை விட 332 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர், இங்கிலாந்து அணியை கலாய்த்து பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்றதை மதுபோதையுடன் கொண்டாடிய அந்த அணியின் ஆண்ட்ரூ பிளின்டாஃப் மற்றும் கெவின் பீட்டர்சனின் புகைப்படத்தை பகிர்ந்து,  'உங்கள விட high தான்' என கலாய்த்துள்ளார்.

________________

ரிஷப் பண்ட்டை புகழந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் 

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 416 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார். அவர் 111 பந்தில் 146 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்தார். 

இந்த நிலையில் அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் பாராட்டு தெரிவித்துள்ளார். ரிஷப் பண்ட் குறித்து அவர் கூறியதாவது : அவர் விக்கெட் கீப்பர்களின் பிரையன் லாரா. வார்விக்ஷயர் அணிக்காக பிரையன் லாரா 501 ரன்கள் குவித்த அதே இடமான பர்மிங்காமில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. பண்ட் அந்த போட்டியின் காட்சிகளைக் கண் முன் கொண்டுவந்துள்ளார். அவர் பேட்டிங்கின் போது குறைந்த கால் அசைவைக் கொண்டிருக்கிறார். இருப்பினும் பந்தை நன்றாக எதிர்கொள்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!