Idhayam Matrimony

வீட்டு உபயோக சமையல் கியாஸ் விலை ரூ.50 உயர்வு

புதன்கிழமை, 6 ஜூலை 2022      தமிழகம்
Cylinder 2022-07-06

Source: provided

சென்னை : வீட்டு உபயோக  சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும்  சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றன. இதன்படி, தொடர்ந்து எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மே 7-ம் தேதி முதல்முறையாக ஆயிரத்தைக் கடந்த வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 1,015ஆக இருந்தது. தொடர்ந்து மே 19ஆம் தேதி ரூ. 1,018.50ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று ரூ. 50 உயர்த்தப்பட்டதை அடுத்து சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 1,068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும், வணிக பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ. 8.50 குறைக்கப்பட்டு ஒரு சிலிண்டரின் விலை ரூ.2177.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ச்சியான விலை உயர்வு காரணமாக நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து