முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்ராந்த் ரோணா விமர்சனம்

சனிக்கிழமை, 30 ஜூலை 2022      சினிமா
Vikrant 2022 07-31

Source: provided

காவல்துறை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கமரோடு டவுனுக்கு வரும் போது கொல்லப்பட, அதை விசாரிக்கும் அதிகாரியாக, தனது மகளுடன் அங்குவருகிறார் விக்ராந்த் ரோணா என்கிற சுதீப். வரும்போதே சில அசாதாரண நிகழ்வுகளை காண்கிறார். ஆச்சரியத்தோடு விசாரணையை தொடங்கினால், அங்கு 16 குழந்தைகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டிருப்பது தெரியவருகிறது. காட்டுக்குள் இருக்கும் பேய்தான் இதை செய்ததாக நம்புகிறது ஊர் உலகம். ஆனால் உண்மையில் அதை செய்தது யார், எதற்காக இந்த கொலைகள்? என்பதை விக்ராந்த் ரோணா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் இந்த படம். அதே நேரம் கோயில் நகையை திருடிவிட்டு ஊரை விட்டு ஓடிய ஊர் பெரியவர் 26 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பியவுடன்,  அங்கு நடக்கும் நிகழ்வு என ஒரு கதை மற்றொரு டிராக்கில் செல்கிறது. கையில் சுருட்டு, இடுப்பில் துப்பாக்கி, சந்தேக வலைக்குள் ஒவ்வொருவரையும் கொண்டுவரும் விதம், மகளிடம் காட்டும் பாசம், காட்டுக்குள் தனியாக செல்லும் துணிச்சல், கிளைமாக்ஸ் மோதல் என தனது ஹீரோயிசத்துக்கு நியாயம் செய்கிறார் சுதீப். வீராப்பு கொண்ட கோபக்கார பெரியவராக மதுசூதன் ராவ் மனதில் பதிகிறார். அம்மாவாக வரும்பிரியா வி.விஸ்வநாத்தாக வரும் ரவிசங்கர் கவுடா உட்பட பலரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்கின்றனர். அஜனீஸ் லோகநாத்தின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. படத்தில் சில இடங்களில் ஆங்காங்கே வேகத்தடைகள் இருந்தாலும் பிரமாண்ட படத்தை கொடுத்த 3D தொழில் நுட்ப ஒளிப்பதிவாளர் வில்லியம் டேவிட்டுக்கும் இயக்குனர் அனூப் பண்டாரிக்கும் பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து