முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் தொடரும் கனமழை: 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      இந்தியா
Kerala 2022 07-31

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் தொடரும் கனமழையை தொடர்ந்து 8 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. 

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து உள்ளது. 

இதற்கிடையில் மத்திய கேரளாவில், வட கேரளாவிலும் கனமழை தொடரும் எனவும் கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மேலும் கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, பத்தனம்திட்டா, ஆலப்புழா, உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி உள்ளது. இதனையடுத்து இந்த பகுதிகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து