எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பர்மிங்ஹாம் : காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக உணர்ச்சிவசப்பட்ட இந்திய வீராங்கனை பூஜா கெலாட்க்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்து பதிவிட்டுள்ள ட்வீட் கவனம் ஈர்த்துள்ளது.
பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை பூஜா கெலாட் வெண்கலம் வென்றிருந்தார். பதக்கம் பெற்றாலும் மகிழ்ச்சியடையாத பூஜா, ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது தங்கம் வெல்ல முடியவில்லை என்ற வருத்தத்தை வெளிப்படுத்தினார். கண்ணீருடன் பேசிய பூஜா, "அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தங்கம் வென்று இந்த மண்ணில் நம் தேசிய கீதத்தை ஒலிக்கவைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், நடக்கவில்லை. என் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அவற்றைச் சரிசெய்வேன்" என்று உருக்கமாக பேசினார்.
பூஜாவை ஆறுதல்படுத்தும் பொருட்டு இந்த வீடியோ பதிவை டேக் செய்த பிரதமர் மோடி, "பூஜா, நீங்கள் வென்றுள்ள பதக்கம் கொண்டாட்டங்களுக்கு உரித்தானது. கொண்டாட்டங்களுக்கு உங்கள் பதக்கம் அழைப்புவிடுக்கிறது அன்றி மன்னிப்பு அல்ல. உங்கள் வாழ்க்கை பயணம் எங்களுக்கெல்லாம் உதேவேகம் கொடுக்கிறது. உங்கள் வெற்றி எங்களை மகிழ்விக்கிறது. எதிர்காலத்தில் பெரிய விஷயங்களுக்காக விதிக்கபட்டுள்ளீர்கள் நீங்கள். பிரகாசமாக இருங்கள்" என்று பதிவிட்டுள்ளது கவனம் பெற்றுவருகிறது.
2019 U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 53 கிலோ பிரிவில் வெள்ளி வென்றவர் பூஜா கெலாட். அதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி என்ற சாதனையையும் அவர் படைத்தார். எனினும், அதன்பின் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு காமன்வெல்த் தொடரின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். ரீ என்ட்ரியில் வெண்கலப் பதக்கத்துடன் தனது பயணத்தை தொடக்கி இருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


