முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் உ.பி. முதல்வர் யோகி சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      இந்தியா
Yoki 2022-08-07

Source: provided

புதுடெல்லி : உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேசினார். 

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது வளர்ச்சி திட்டங்கள் உத்தர பிரதேச மாநில அரசியல் சூழல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்து இருக்கலாம் என்று தெரிகிறது. 

முன்னதாக, நிதி ஆயோக்கின் 7-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் ராஷ்டிரபதி பவனில் உள்ள கலாசார மைய கட்டிடத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நகர வளர்ச்சி, தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்துதல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து