முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீதா ராமம் விமர்சனம்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      சினிமா
Sita-Ram-Review 2022-08-08

Source: provided

துல்கர்சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா ஆகியோரின் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் சீதா ராமம் . 1964 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் நடக்கிற மாதிரியான ஒரு கற்பனைக்கதை. இந்திய இராணுவத்தில் இருக்கும் நாயகன் துல்கர்சல்மான், காஷ்மீரில் நடக்கவிருந்த ஒரு பெரிய மதக்கலவரத்தைத் தன் புத்திசாலித்தனத்தால் தடுத்து நிறுத்துகிறார். இந்நிலையில் அவரிடம் எடுக்கப்படுகிற வானொலிப் பேட்டியில், தான் ஓர் அனாதை என்று சொல்கிறார். அன்றிலிருந்து அவருக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வரத்தொடங்குகின்றன. அவற்றில் ஒரு கடிதம், நான் உங்கள் மனைவி சீதாமகாலட்சுமி என்கிறது. அனுப்புநர் முகவரி இல்லாத அந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு அனுப்பியவர் யார் எனத் தேடிப்போகிறார் நாயகன். அவரைக் கண்டுபிடித்தாரா? அவர் யார் என்பதை காதல்ரசம் சொட்டச் சொல்லியிருக்கும் படம் தான் சீதாராமம். நாயகன் துல்கர்சல்மான், ராணுவ வீரராகவும் காதல் பித்தேறியவராகவும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். சீதா மகாலட்சுமியாக நடித்திருக்கும் மிருணாள் தாகூர், கண்களிலேயே கசிந்துருகுகிறார். ராஷ்மிகாவின் நடிப்பும் அருமை. தருண்பாஸ்கர், வெண்ணிலாகிஷோர், கெளதம்மேனன், பிரகாஷ்ராஜ், சுமந்த் உள்ளிட்ட பலரும் தத்தம் பணிகளை சரியாகச் செய்துள்ளார்கள். ஒளிப்பதிவு, படத்தின் மிகப்பெரிய பலம். பாடல் காட்சிகள் அற்புதம்.விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுகம். அதற்கேற்ற வரிகள். கடிதங்களே பார்த்திராத இந்தத் தலைமுறைக்கும் கடிதங்கள் மேல் ஈர்ப்புவருகிற மாதிரியான வார்த்தைகளுடன் அமைந்த தமிழுக்குச் சொந்தக்காரர் மதன்கார்க்கி. தமிழில் இப்பட வெற்றிக்கு அவரே முதன்மைக்காரணமாக இருப்பார். மொத்தத்தில் சீதா ராமம் ஒரு காதல் ஓவியம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து