முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு உலகக் கோப்பைகளை வெல்ல ரஸ்ஸல் விருப்பம்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Russell 2022-08-17

Source: provided

சமீபத்திய மே.இ. தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களில் பிரபல வீரர் ரஸ்ஸல் இடம்பெறவில்லை. 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு அவர் இந்தப் பக்கமே திரும்பவில்லை. தற்போது இங்கிலாந்தில் தி ஹன்ட்ரெட் போட்டியில் விளையாடி வருகிறார். சிம்மன்ஸின் விமர்சனத்துக்குப் பதில் அளித்து இன்ஸ்டகிராமில் ரஸ்ஸல் கூறியதாவது.,

இந்நிலையில் தி ஹன்ட்ரெட் போட்டியின்போது டேரன் சமிக்கு அளித்த பேட்டியில் ரஸ்ஸல் கூறியதாவது: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாட எப்போதும் விருப்பப்படுவேன். சில நிபந்தனைகள் சரிவரவில்லை என்றால்... என்னுடைய நிபந்தனைகளை மே.இ. தீவுகள் அணி நிர்வாகம் மதிக்கவேண்டும். அது அப்படித்தான். எனக்கு வயது 34. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக இரு உலகக் கோப்பைகளையாவது வெல்ல வேண்டும் என விரும்புகிறேன் என்றார். 

_____________

செஸ் - 2-வது சுற்றிலும் பிரக்ஞானந்தா வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா. முதல் சுற்றில் உலகின் நெ.1 ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை 2.5-1.5 என வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. 

2-வது சுற்றில் பிரபல வீரர் அனிஷ் கிரியை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. முதல் ஆட்டத்தில் தோல்வி பெறும் நிலையில் இருந்து தப்பித்து டிரா செய்தார் பிரக்ஞானந்தா. அடுத்த இரு ஆட்டங்களும் டிரா ஆயின. கடைசி ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா 2.5-1.5 என்கிற புள்ளிக்கணக்கில் அனிஷ் கிரியை 2-வது சுற்றில் வீழ்த்தினார். 8 வீரர்கள் விளையாடும் இந்தப் போட்டியில் கார்ல்சனுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. 

____________

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்  அணிக்கு புதிய பயிற்சியாளர் 

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக மெக்குல்லம் நியமிக்கப்பட்டதையடுத்து கேகேஆர் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அவர் விலகினார். இதையடுத்து கேகேஆர் அணிக்குப் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் - புதிய பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கூட்டணியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என கேகேஆர் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறியுள்ளார். 

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வென்று, போட்டியின் 87 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் ஆனது. 41 முறை ரஞ்சி சாம்பியனான மும்பையை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை மத்தியப் பிரதேச அணி வெல்ல முக்கியக் காரணம் - பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் (60). இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

________________

ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லும்: சல்மான் பட்

ஆசிய கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறியுள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த வருடம் இந்திய அணி ஆசிய கோப்பையை வெல்லும் என கருதுகிறேன். ஏனெனில், அவர்கள் மிகச்சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் விதம், அவர்களிடம் உள்ள வீரர்களின் பலம், திறமை இந்தியாவின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

மேலும், பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்களது நாளாக அமைந்தால் அவர்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். மேலும், ஆப்கானிஸ்தான் அணியையும் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து