எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ " உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் 20 பேரை ஏற்றிச் சென்ற டிராக்டர் ஒன்று கர்ரா ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் ஐந்து பேரைக் காணவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து, ஹர்டோய் மாவட்ட மாஜிஸ்திரேட் அவினாஷ் குமார் கூறுகையில், டிராக்டர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவர் முகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டிராக்டரின் சக்கரம் கழன்றியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் டிராக்டருடன் கர்ரா ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் 14 பேர் உயிர் பிழைத்துள்ளனர். உயிரிழந்த முகேஷின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
காணாமல் போன ஐந்து பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்பு குழு மற்றும் மாகாண ஆயுதப்படை வெள்ளப் பிரிவு குழுக்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அனைவரும் மீட்கப்படும் வரை நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


