முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் குழந்தைகள்

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      உலகம்
Afghanistan 2022 09 23

Source: provided

காபூல் : ஆப்கனில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக செங்கல் சூளைகளில் குடும்பத்தினருடன் குழந்தைகள் வேலை பார்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, பொருளாதார வீழ்ச்சியினால் அங்கு குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என பல்வேறு நாடுகளில் சட்டம் இருந்தும், குழந்தை தொழிலாளர்கள் சட்டவிரோதமாக பணிகளில் ஈடுபடுத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உலகம்  முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 16 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்(யுனிசெப்) தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளினால் மேலும் 90 லட்சம் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பொருளாதார வீழ்ச்சியினாலும், உலக நாடுகள் வழங்கும் நிதியை நிறுத்தியதாலும் அங்கு குழந்தைகள் அதிகமாக பணியமர்த்தப்படுகின்றனர்.

அங்கு இது மிகவும் சாதாரணமாக மாறி வருகிறது. சேவ் த சில்ட்ரன் என்ற அமைப்பினால் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஆப்கனில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் 50 சதவீத குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை ஓட்டல்களில் மேஜை துடைப்பதற்கு வேலைக்கு அமர்த்தியுள்ளனர். 

அதுபோல, அங்குள்ள செங்கல் சூளைகளில் நான்கு அல்லது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கோடை வெப்பத்திலும் அதிகாலை முதல் இரவு வரை தங்கள் குடும்பத்தினருடன் வேலை செய்கிறார்கள். செங்கல் தயாரிப்பதற்கான அனைத்து நிலைப் பணிகளையும் அவர்கள் செய்கிறார்கள். தண்ணீர் நிரம்பிய பெரிய கேன்களை இழுத்துச் செல்கின்றனர்,

சேறு நிறைந்த மரச் செங்கல் அச்சுகளை எடுத்துச் சென்று வெயிலில் உலர வைக்கின்றனர்.  செங்கல் சூளைகளுக்கு அருகே பாழடைந்த மண் வீடுகளில்தான் இவர்களது குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு பெரும்பாலானவர்களுக்கு ஒரு நாள் உணவு என்பது தேநீரில் ஊறவைத்த ரொட்டி என்பது அதிர்ச்சியாக உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து