முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாப்புலர் பிரண்ட் அமைப்பை தடை செய்ய மத்திய அரசு ஆலோசனை ?

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      இந்தியா
Central-government 2021 07

பாப்புலர் பிரண்ட் அமைப்பை தடை செய்ய மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சதி திட்டங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் 15 மாநிலங்களில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. தேசிய புலனாய்வு முகமையும், அமலாக்கத்துறையும் இணைந்து நடத்திய இந்த சோதனை நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது.

இந்த சோதனையை தொடர்ந்து 106 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 10 பேர் கைதாகி இருக்கிறார்கள். இவர்களை டெல்லியில் வைத்து தீவிர விசாரணை நடத்த என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையிலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து கோரிக்கை விடப்பட்டு உள்ளது. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ஏற்கனவே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக அந்த அமைப்பு செய்து வரும் சட்ட விரோத செயல்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகளும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் தொகுத்து உள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை நாடு முழுவதும் தடை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு வளைகுடா நாடுகளில் நெட் வொர்க் அமைத்து மிகப்பெரிய அளவில் பல கோடி ரூபாய் நிதி திரட்டி இருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து உள்ளனர். இதற்கான ஆதாரங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக 2009-ம் ஆண்டு முதல் வளைகுடா நாடுகளில் இருந்து 60 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பெறப்பட்டுள்ளது.

சதி திட்டத்தின் அடிப்படையில் இந்த பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். யார், யாருக்கு பணம் சென்றிருக்கிறது என்ற தகவல்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சேகரித்து உள்ளனர். நாடு முழுவதும் சுமார் 2,600 பேருக்கு இந்த வகையில் பண பரிமாற்றம் நடந்துள்ளது. அவர்கள் மூலம் பா.ஜனதா ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

இப்படி அமலாக்கத்துறையும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. இவற்றை காரணம் காட்டி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிரந்தரமாக தடை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து