Idhayam Matrimony

பைசர் நிறுவன சி.இ.ஓ.-வுக்கு 2-வது முறையாக கொரோனா

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      உலகம்
Albert 2022-09-25

Source: provided

நியூயார்க்: பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆல்பெர்ட் போர்லாவுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆல்பெர்ட் போர்லாவுக்கு கடந்த ஆகஸ்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது நிறுவனத்தின் கொரோனா சிகிச்சைக்கான பேக்ஸ்லோவிட் என்ற தடுப்பு மருந்தினை அவர் எடுத்து கொண்டார். இந்நிலையில், அவருக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் நன்றாகவே உள்ளேன். கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவுமின்றி காணப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

வயது முதிர்ந்த நோயாளிகள் போன்ற, அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்கு பேக்ஸ்லோவிட் தடுப்பு மருந்து சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். பைசர் மற்றும் அதன் ஜெர்மன் நாட்டு பங்குதாரரான பையோஎன்டெக் நிறுவனத்தின் உற்பத்தியான கொரோனா தடுப்பு மருந்தின் 4 டோஸ்கள் போர்லாவுக்கு அளிக்கப்பட்டு உள்ளன. எனினும், புதிய வகை ஈரிணை திறம் வாய்ந்த பூஸ்டர் தடுப்பூசியை இன்னும் எடுத்து கொள்ளவில்லை என போர்லா கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து