முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவையில்லாத வழக்குகள் தாக்கல்: தமிழக அரசுக்கு அபராத விதித்தது சுப்ரீம் கோர்ட்..!

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்வதாக கூறி தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எம் ஆத் ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் `இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது. பென்ஷன் விவகாரத்தில் நீதிமன்றம் வரை விவகாரம் வந்து, அது நிறைவடைந்து விட்ட போதிலும், மீண்டும் சம்பந்தப்பட்ட மனுதாரர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என அரசு வாதிடுகிறது. இதை ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல’ எனக் கூறி 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் மனுவை தள்ளபடி செய்தும் உத்தரவிட்டனர். 4 வாரத்தில் அபராத தொகையை உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து