முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் விடுமுறை எதிரொலி: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      தமிழகம்
Okanagal 2022-10-02

Source: provided

தருமபுரி : தொடர் விடுமுறையை அடுத்து சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 14 ஆயிரம் கனஅடிநீர் வந்து கொண்டிருந்தது. 

இந்த நிலையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி அதே அளவு நீடித்து தண்ணீர் வந்தது. இதனால் ஐவர்பாணி, மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். 

தொங்கு பாலத்தில் நின்றவாறு பாறைகளுக்கு இடையே தண்ணீர் விழும் காட்சியை கண்டு கழித்தனர். மெயின் அருவி குளிக்கும் இடம் சேதமானதால் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவிரி ஆற்றின் ஓரங்களில் இறங்கி சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தொடர் விடுமுறையால் ஒகேனக்கல்லில் மக்கள் குவிந்தனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து