முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள்: மழைநீர் வடிகால் பணிகளை 8-ம் தேதி ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை வரும் 8-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்ய உள்ளனர்.

சென்னையில் மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் கால்வாய்களை தூர்வாருதல், நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரும், மாநகராட்சி சார்பில் ஓட்டேரி கால்வாய், மாம்பலம் கால்வாய் ஆகியவற்றில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பருவமழை இம்மாதம் 15-ம் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பாக பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், சென்னையில் வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணி துறை ஆகிய துறைகள் சார்பில் சென்னையில் மேற்கொண்டு வரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என் நேரு, ஏ. வ.வேலு, மா.சுப்ரமணியன், சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாக துறை செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு முறை பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பணிகளை விரைவுப்படுத்தி வரும் 15-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 8-ம் தேதியும், தலைமைச் செயலாளர் இறையன்பு வரும் 7-ம் தேதி நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து