முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்கத்தில் நேர்ந்த துயரம்: துர்கா தேவி சிலை கரைக்கும் போது ஏற்பட்ட வெள்ளத்தில் 8 பேர் பலி..!

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      இந்தியா
Flood 2022-10-06

Source: provided

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மால் நதியில் புதன்கிழமை துர்கா தேவி சிலைகளைக் கரைக்கும் போது ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி சுமார் 8 பேர் பலியாகினர். பலர் காணாமல் போயிருப்ப்தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வட மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த துர்கா பூஜை புதன்கிழமை நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து துர்கா தேவி சிலைகள் நீர்நிலைகளுக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டன. மேற்குவங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள மால் நதியில் துர்கா தேவி சிலைகளைக் கரைக்கும் போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மூழ்கி நான்கு பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணாமல் போயிருக்கின்றனர்.

இந்தவிபத்து குறித்து மாவட்ட நீதிபதி மவுமிதா கோடரா கூறுகையில், துர்கா தேவி சிலைகளை கரைப்பதற்காக நேற்று முன்தினம் மாலையில் நூற்றுக்கணக்கானோர் நதிகரைகளில் கூடியுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 50 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சின்னசின்ன காயங்களுடன் மீட்கப்பட்ட 13 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய, மாநில பேரிடர் மீட்பு படைகள், உள்ளூர் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், மால் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவுமான புலு சிக் பராய்க், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மீட்பு பணிகளை பார்வையிட விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என கவலை தெரிவித்துள்ள அமைச்சர் விபத்துக்குறித்து கூறும்போது, "அந்த துயரச்சம்பவம் நடக்கும் போது நான் அங்கு தான் இருந்தேன்.அப்போது அங்கு நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். நீரோட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. பலர் காணாமல் போயிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

விபத்துகுறித்து பிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியில் நடந்த துர்கா பூஜையில் ஏற்பட்டுள்ள விபத்து குறித்து கேள்விப்பட்டு பிரதமர் மிகவும் வேதனை அடைந்ததாகவும், விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கள்களைத் தெரிவித்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநில எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில்,"ஜல்பைய்குரியில் நடந்த துர்கா பூஜையில் ஏற்பட்ட விபத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக வேதனையான தகவல்கள் வருகின்றன. சிலரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாவட்ட நீதிபதி மற்றும் மாநில நிர்வாகமும் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் துர்கா தேவி சிலையை கரைக்கும் போது, ஆக்ரா நதியில் மூழ்கி, 15 வயது சிறுவன், 19 மற்றும் 22 வயதுடைய வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் இதேபோன்ற துயர சம்பவம் நடந்துள்ளது. அங்கு மழைநீர் தேங்கியிருந்த பள்ளம் ஒன்றில் துர்கா தேவி சிலையினை கரைக்கும் போது, நீரில் மூழ்கி ஆறுபேர் உயிரிழந்தனர். ஆறுபேர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து