முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிச. 1-ல் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      அரசியல்
Duraimurugan 2022 09 02

தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நவம்பர் 1-ம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

தி.மு.க.வில் நீண்ட காலம் பொதுச்செயலாளராக இருந்து சாதனை படைத்தவர் மறைந்த க.அன்பழகன். இனமான பேராசிரியர் என்று தி.மு.க.வினரால் அன்போடு அழைக்கப்பட்ட அவருக்கு நூற்றாண்டு பிறந்த நாள் விழா நிறைவு பெற உள்ளது. இதை சிறப்பாக கொண்டாட தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  

தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நவம்பர் 1-ம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. தி.மு.க.வில் நேற்று புதிதாக இளைஞர் அணி மற்றும் மகளிர் அணிக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடப்பதால் அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் பாராளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகள் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து