முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் பாலிவுட் நடிகையுடன் கே.எல்.ராகுலுக்கு திருமணம்

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      விளையாட்டு
Athiya-Rahul 2022 11 23

Source: provided

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், பிரபல நடிகையுமான அதியாவும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சுற்றுலா செல்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த ராகுல் -அதியா ஷெட்டி ஜோடி இந்த ஆண்டு தாங்கள் காதலிப்பதை உறுதி செய்தனர்.

இந்நிலையில், தற்போது இந்த ஜோடியின் திருமணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அதியா ஷெட்டி - கே.எல்.ராகுல் ஜோடியின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

________________

யுவராஜ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பிய கோவா அரசு

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பல்வேறு விளம்பர படங்களில் யுவராஜ் சிங் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் பல தனியார் தொழில்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டி வருகிறார். இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தளமான கோவாவில் யுவராஜ் சிங்கிற்கு சொந்தமான ஒரு சொகுசு வீடு உள்ளது. இங்கு அவர் அடிக்கடி குடும்பத்தினருடன் சென்று நேரத்தை செலவிடுவார். அதனை தற்போது விடுதியாக மாற்றி சுற்றுலா பயணிகளுக்கு வாடைகைக்கு விடுகிறார். இதுகுறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

கோவாவில் ஒருவர் விடுதி நடத்த வேண்டுமென்றால், அரசிடம் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அதை எதையுமே செய்யாமல் யுவராஜ் சிங் இப்படி செய்துள்ளார். எனவே கோவாவின் சுற்றுலா துறை இயக்குநர் சார்பில் ராஜேஷ் காலே, வரும் டிசம்பர் 8ம் தேதி 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. அதுவரை அது விடுதியாகாது. ஒருவேளை அரசு அனுப்பிய கடிதத்திற்கு யுவராஜ் சிங் எந்தவொரு பதிலும் தரவில்லை என்றால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கருதி, அவருக்கு குறைந்தது ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

________________

தரவரிசையில் முதல் இடத்தை இழந்தது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இந்த தொடரில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக வென்றது. இந்த தொடரரை முழுமையாக இழந்ததன் மூலம் இங்கிலாந்து அணி ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் முதலிடத்தை பறிகொடுத்துள்ளது. உலக கோப்பை சாம்பியனான இங்கிலாந்து அணி தரவரிசையில் முதல் இடத்தை இழந்துள்ளது.

2வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணி 3வது இடத்திலும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முழுமையாக வென்றதன் மூலம் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா 4வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. பாகிஸ்தான் 5வது இடத்துக்கு சரிந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து