Idhayam Matrimony

திகார் சிறையில் ஆம்ஆத்மி தலைவர்: நட்டா கடும் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      இந்தியா
JP-Natta 2022-11-27

Source: reuters

புது டெல்லி ; திகார் சிறையில் ஒரு மசாஜ் சென்டரை திறந்து, பாலியல் குற்றவாளியை பிசியோதெரபிஸ்டாக மாற்றியுள்ளனர் என்று சத்யேந்திர ஜெயின் குறித்து ஜே.பி. நட்டா கடுமையாக தாக்கி பேசினார். 

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் வருகிற டிசம்பர் 4-ம் தேதி டெல்லியில் உள்ள 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. டெல்லி மாநகராட்சி பகுதிகளில் இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வஜிர்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

டெல்லி மக்கள் வரவிருக்கும் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஆர்வமாக உள்ளனர். ஆம் ஆத்மியின் செயல்பாடுகளால் பொதுமக்கள் அலுத்துப்போய், பா.ஜ.க.வை பாராட்டி வருகின்றனர்.  ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் நேர்மையானவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் ஊழல் வழக்கில் சத்யேந்திர ஜெயின் சிறையில் இருக்கிறார். அவர்கள் திகார் சிறையில் ஒரு மசாஜ் சென்டரை திறந்து, பாலியல் குற்றவாளியை பிசியோதெரபிஸ்டாக மாற்றியுள்ளனர் என்று பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து