Idhayam Matrimony

தி.மலை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்: அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      தமிழகம்
Sivasankar 2022-06-06

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தொலைதூரபயணிகளின் வசதிக்காக கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப  திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம்  அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் 05/12/2022 மற்றும் 06/12/2022 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது.

இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in ,http://www.tnstc.in, மற்றும் tnstc official app, ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை 9445014426, திருநெல்வேலி  9445014428, நாகர்கோவில் 9445014432,  தூத்துக்குடி 9445014430,  கோயம்புத்தூர் 9445014435, தலைமையகம்  9445014435, 9445014424 மற்றும் 9445014416, ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனவே, திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ள  கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து