முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகிங்கில் ஈடுபட்டதாக புகார்: சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

Source: provided

வேலூர் : வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட மேலும் 3 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

ராகிங் தொடர்பாக ஏற்கெனவே 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  ராகிங்கைத் தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாகவும் சிஎம்சி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் கடந்த மாதம் முதலாம் ஆண்டு மாணவர்களை உள்ளாடையுடன் நடக்கவைத்து ராக்கிங் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான காணொலி காட்சி பதிவு சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சம்பவத்தில் தொடர்புடைய 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.

இந்த விவகாரம் குறித்தும், அதன் பேரில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் உரிய விளக்கம் அளிக்கும்படி மருத்துவப் பல்கலை. பதிவாளர் டாக்டர் அஸ்வத் நாராயணன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஏற்கெனவே 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது 3 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ராகிங்கை முழுமையாகத் தடுக்கும் நோக்கத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிஎம்சி மருத்துவக் கல்லூரி குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து