முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர் மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை: அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025      தமிழகம்
Raghupati 2024-10-28

Source: provided

புதுக்கோட்டை :  திருப்புவனம் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என  அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்துள்ள மெய்வழிச்சாலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில்,  10- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இதையடுத்து தகவலறிந்து நிகழ்விடம் சென்ற கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி, வீடு இழந்து தவிப்போருக்கு உடனடி நிவாரணமாக அரிசி, பருப்பு, காய்கறி, போர்வை, வேட்டி, சேலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் ரகுபதி,

"திருப்புவனம் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை. அண்ணா பல்கலைக்கழக விவாரத்திலும் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று கூறினார்கள். ஆனால் நாங்கள் முறையான விசாரணையை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தோம், அதேபோல, திருப்புவனம் சம்பவத்திலும் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  

தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு கட்சியாகவே நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை. கட்சியாக எடுத்துக்கொண்ட பிறகு அவரது கருத்துகள் குறித்து பேசலாம். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செல்வது போல் எங்கள் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து