முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படகு சவாரி - நீர் விளையாட்டு வசதிகள்: பூண்டி ஏரியில் விரைவில் அறிமுகப்படுத்த அரசு முடிவு

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      தமிழகம்
Bundi-Lake 2022-11-29

Source: provided

செங்கல்பட்டு : பூண்டி, செங்கல்பட்டு கொளவாய் ஏரி, திருப்பூர் ஆண்டிபாளையம் ஏரி பகுதியில் நீர் விளையாட்டுகள், படகு சவாரி, சாகச விளையாட்டுகள் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. 

இது குறித்து தமிழக சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறி இருப்பதாவது:- 

பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீர் விளையாட்டுகள், பல்வேறு வகையான படகுகள், வாட்டர் ஸ்கூட்டர்கள், விரைவுப் படகுகள் வசதிகள் கொண்டு வரப்பட உள்ளது. பூண்டி நீர் தேக்கத்துக்கு வருகை தரும் பறவைகளுக்கான பார்வையாளர் மாடம் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய சுற்றுலா தளமாக மாற்றப்பட உள்ளது.

அதே போல், செங்கல்பட்டு மாவட்டம் கொளவாய் ஏரியில் படகு சவாரி, நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான கொளவாய் ஏரி அமைந்துள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை இங்கு ஏற்படுத்துவதன் மூலம் அதிக சுற்றுலா பயணிகள் வருவதற்கு வாய்ப்பாக அமையும். 

இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் படகு சவாரி, நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் ஏரியில் படகு சவாரி நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதோடு, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உள்ள சுற்றுலா பயணிகளை இது பெரிதும் கவரும் என்பதோடு, சுற்றுலாத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து