முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நலக்குறைவு: மலையாள காமெடி நடிகர் காலமானார்: முதல்வர் பிரணாய் விஜயன் இரங்கல்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      சினிமா
Kochu-Breman 2022 12 03

மலையாள காமெடி நடிகர் கொச்சு பிரேமன் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

கேரளாவில் நாடக கலைஞராக இருந்து பின்னர் திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் கே.எஸ். பிரேம் குமார் என்ற கொச்சு பிரேமன். இவர், நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில் நடித்து உள்ளார். தொலைக்காட்சிகளில் பல மலையாள தொடர்களிலும் நடித்து உள்ளார். இவரது முதல் படம் தில்லிவாலா ராஜகுமாரன். 1996-ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் நடிகர் ஜெயராம், நடிகை மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏறக்குறைய 250 படங்களில் நடித்து உள்ளார். 

 

இந்த நிலையில், சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து அவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 68. அவரது மறைவுக்கு முதல்வர் பினராய் விஜயன், எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதே போன்று பிரேமன் மறைவுக்கு, நடிகர்கள் பிருத்விராஜ், அஜூ வர்கீஸ், மனோஜ் கே. ஜெயன் மற்றும் நாதீர்ஷா உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து