முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் தமிழிசை தரிசனம்: வி.ஐ.பி. தரிசன நேர மாற்றத்திற்கு பாராட்டு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      ஆன்மிகம்
Tamilisai 2022 12 03

தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான  தமிழிசை சௌந்தரராஜன்  நேற்று திருப்பதி அருள்மிகு ஏழுமலையான் திருக்கோவிலில் தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த தமிழிசை சௌந்தராஜனுக்கு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் மற்றும் ஏழுமலையான் படத்துடன் 2023-ம் ஆண்டுக்கான நாள்காட்டியும் வழங்கப்பட்டது.  அப்போது, காலை 5 மணிக்கு இருந்த வி.ஐ.பி. தரிசன நேரத்தை காலை 10 மணிக்கு மாற்றி இரவு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு இறைவனை தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் காலையில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் நேரம் மாற்றப்பட்டதற்கும் தமிழிசை பாராட்டு தெரிவித்தார். 

அதாவது, வி.ஐ.பி. தரிசன நேரத்தை மாற்றி அமைத்து பொதுமக்கள்  பயன்பெறும் வகையில் மக்களுக்கு முன்னுரிமை அளித்து தரிசன நேரத்தை மாற்றியமைத்த திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து