முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி ஏய்ப்பு மோசடி வழக்கு: டிரம்ப்பின் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு உறுதியானது

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      உலகம்
Trump-Tower 2022 12 08

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் 2 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 13-ம் தேதி வழங்கப்படுகிறது. அப்போது அந்த 2 நிறுவனங்களுக்கும் தலா  ரூ. 13.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் தி டிரம்ப் ஆர்கனைஸேசன், டிரம்ப் பே ரோல் கார்ப் ஆகிய இரண்டு நிதி நிறுவனங்களும் 13 ஆண்டுகளாக தவறான தகவல்களை அளித்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றப்பிரிவின் கீழான 17 குற்றச்சாட்டுகளிலும் இந்நிறுவனங்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டன. 

நியூயார்க் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில், தொடர்ந்து 2 நாட்களாக 10 மணி நேரம் நடந்த வக்கீல்கள் வாதத்துக்கு பிறகு குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டது. அதில், இந்நிறுவனங்கள் 13 ஆண்டுகளாக போலி தரவுகளை வழங்கி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜனவரி 13-ம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். அப்போது,  2 நிறுவனங்களுக்கும் தலா ரூ. 13.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிகிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்புக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து