முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசியில் ரூ. 238.90 கோடியில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      தமிழகம்
CM-2 2022 12 08

Source: provided

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ. 34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், இராணிப்பேட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

முதல்வராக பதவியேற்றப் பிறகு முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து தென்காசிக்கு ரயில் மூலம் பயணம் மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை சென்றடைந்த முதல்வருக்கு, தென்காசி ரயில் நிலையத்தில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெரியோர்கள், தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

நேற்று  காலை தென்காசி ரயில் நிலையத்திலிருந்து விருந்தினர் மாளிகை செல்லும் வழியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திரண்டிருந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களது உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டார். 

அதை தொடர்ந்து தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர், மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மொத்தம் 22 கோடியே 20 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், இவ்விழாவில் மொத்தம் 34 கோடியே 14 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். 

அதை தொடர்ந்து இவ்விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,03,508 பயனாளிகளுக்கு 182 கோடியே 56 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். 

முன்னதாக, தென்காசி, வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார். அதை தொடர்ந்து அப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என். நேரு,  கூட்டுறவுத் துறை அமைச்சர்  பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர்  பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்  .எம்.தனுஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள்,  .பழனிநாடார்,  ராஜா, டாக்டர் தன் திருமலைக்குமார், எம். அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர்  பி.எம். சரவணன், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ், அரசு உயர் அதிகாரிகள், தென்காசி மாவட்டச்செயலாளர் சிவபத்மநாதன், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட ம் மாவட்ட துணை செயலாளர் சிவ.அருணன், செங்கோட்டை நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன், செங்கோட்டை கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் வழக்கறிஞர் ஆபத்துக்காத்தான், செங்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் ரவிசங்கர், முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மகுதுமீரான், தென்காசி ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் ஹாஜி ஷேக்அப்துல்லா, தென்காசி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வல்லம் எம்.திவான் ஒலி, குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், துணைத்தலைவர் சண்முகசுந்தரம்,  உட்பட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து