Idhayam Matrimony

பட்ஜெட் குறித்து வரும் 13-ம் தேதி பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2023      இந்தியா
Modi-2022 12 20

Source: provided

புதுடெல்லி : பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை 13-ந்தேதி நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதை முன்னிட்டு நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பாக பொருளாதார நிபுணர்கள், நிதி ஆயோக்கின் துறை சார்ந்த வல்லுனர்களுடன் பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான விவாதங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல்வேறு மத்திய மந்திரிகளும் பங்கேற்பார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடியின் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து