இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பிரபல கிரிக்கெட் வீரர் அக்ஷர் படேலுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 29 வயது அக்ஷர் படேல் இந்திய அணிக்காக 8 டெஸ்டுகள், 49 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்நிலையில், அக்ஷர் படேல், தனது காதலி மேஹா படேலை வதோதராவில் வியாழக்கிழமை திருமணம் செய்தார். மேஹா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்.
அக்ஷர் படேலின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனாட்கட், இன்ஸ்டகிராமில் மணமக்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் சமூகவலைத்தளங்களில் அக்ஷர் படேல் திருமணப் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.
________________
டோனியின் இடத்தை கண்டிப்பாக நிரப்புவேன்: இஷான் நம்பிக்கை
நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி களமிறங்குகிறது. இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலமையில் இந்தியா களமிறங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இந்திய அணியில் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இஷான் கிஷன் மட்டும் விளையாடுகிறார். இந்நிலையில் டோனி குறித்து அவர் பேசியதாவது:- நான் முதலில் 23 நம்பரை என்னுடைய ஜெர்சியில் கேட்டேன். ஆனால் அது ஏற்கனவே குல்தீப் யாதவ் பயன்படுத்தி விட்டதால் வேறு நம்பரை கேட்குமாறு என்னிடம் கூறினார்கள்.
அப்போது எனது அம்மாவிடம் போன் செய்து உங்களுக்கு பிடித்த நம்பரை சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன 32 நம்பரை மறு வார்த்தை பேசாமல் எனது ஜெர்சியில் பயன்படுத்தி வருகிறேன். நான் எதற்காகவும் பயப்பட மாட்டேன். எனது வழியில் வரும் அனைத்து சவாலுக்கும் நான் தயாராக இருக்கிறேன்.நான் வளரும் போது என்னுடைய ரோல் மாடல் எம்எஸ் டோனி ஆவார். ஏனெனில் அவர் எங்கள் ஊரிலிருந்து எங்களது ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடியுள்ளார். எனவே இந்திய அணியில் அவரது இடத்தை நான் நிரப்ப விரும்புகிறேன். என்று அவர் கூறினார்.
________________
தேர்வுக்குழு, டிராவிட்டுக்கு சவுரவ் கங்குலி யோசனை
எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை வரையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களும், பயிற்சியாளர் ராகுல் திராவிடும் செய்ய வேண்டியது குறித்து தனது ஆலோசனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., “இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணி. நம் நாட்டில் தொழில்முறை ரீதியாக கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் அதிகம். இதில் பெரும்பாலானவர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் அதற்கான போட்டி மிகவும் அதிகமாக உள்ளதுதான்.
தற்போதைய அணி உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேன். தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் திராவிட் இதை செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்கள் இந்த அணியை ஒருங்கே வைத்திருக்க வேண்டும். உலகக் கோப்பை தொடர் குறித்து வீரர்கள் கவலை கொள்ள வேண்டாம். சிறப்பான ஆட்டத்தை விளையாடினால் போதும்” என கங்குலி சொல்லியுள்ளார்.
________________
நியூசி.,க்கு எதிரான தொடர்: ருதுராஜ் கெய்க்வாட் விலகல்
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த தொடருக்காக இந்திய அணி சேர்க்கப்பட்டுள்ள இளம் ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகி உள்ளார்.
இந்த தொடருக்கு முன்னதாக மகராஷ்டிரா - ஹைதராபாத் அணிகள் மோதிய ராஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்ற அவர் 8, 0 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டிக்கு பின்னர் அவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். காயம் காரணமாக ஏற்கனவே கடந்த ஆண்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியாமல் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
________________
எம்.எஸ். டோனி தயாரிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'டோனி என்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, 'தி ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். சாக்ஷி சிங் டோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்குகிறது. காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
டோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை, மோஷன் போஸ்டர் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இப்படத்திற்கு லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைக்கோஸ் வடை![]() 1 day 20 sec ago |
கீரை ஆம்லெட்![]() 3 days 23 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 1 week 1 day ago |
-
சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக யுவராஜ் டுவீட்
25 Mar 2023அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று முறை முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி இருந்தார் சூர்யகுமார் யாதவ்.
-
கர்நாடக சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 124 பேரின் பட்டியல் வெளியீடு
25 Mar 2023பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்கட்ட வேட்பாளர்கள்
-
100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும்: புடினிடம் கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வீடியோ வைரல்
25 Mar 2023மாஸ்கோ : 100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங், புடினிடம் கூறிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
மாநில மொழிகளில் ஐகோர்ட் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு
25 Mar 2023சென்னை : ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
-
சென்னை, மும்பை. கொல்கத்தாவில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும் : தலைமை நீதிபதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
25 Mar 2023மதுரை : சென்னை, மும்பை, கொல்கத்தாவில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் முதல்வர் மு.க.
-
முதுநிலை பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு இன்று துவக்கம் : அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
25 Mar 2023சென்னை : எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது.
-
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: கவர்னர் ஆர்.என்.ரவி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை
25 Mar 2023சென்னை : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு : முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி
25 Mar 2023சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
-
சாக்லேட் தொழிற்சாலையில் வெடி விபத்து: 2 பேர் பலி
25 Mar 2023வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் மேற்கு ரீடிங் பாரோ பகுதியில் சாக்லேட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழகத்தில் நீதியின் வழியில் ஆட்சி நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் : அமைச்சர் ரகுபதி பெருமித பேச்சு
25 Mar 2023மதுரை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீதியின் வழியிலான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
ராகுல் தகுதி நீக்கம்: மாநிலம் முழுவதும் நாளை முதல் போராட்டம் நடத்த காங். திட்டம்: கே.எஸ்.அழகிரி
25 Mar 2023சென்னை : ராகுலின் தகுதி நீக்கத்தை தொடர்ந்து மத்திய பா.ஜ.க.
-
குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
25 Mar 2023வாஷிங்டன் : குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததற்காக இந்தியருக்கு 15 வருடம் 8 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
-
36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
25 Mar 2023சென்னை : 36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது.
-
தொன்மை வாய்ந்த தமிழ் மொழி, விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் பயன்பாட்டிற்கு வரும் : மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ பேச்சு
25 Mar 2023மதுரை : தொன்மை வாய்ந்த மொழியான தமிழ், விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் பயன்பாட்டிற்கு வரும் என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார்.
-
166 கோடி ரூபாயில் மதுரை கோர்டுக்கு கூடுதல் கட்டிடங்கள் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அடிக்கல்
25 Mar 2023மதுரை : ரூ.166 கோடியில் மதுரை கோர்டுக்கு கட்டப்படவுள்ள கூடுதல் கட்டிடங்களுங்கான அடிக்கல்லை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நேற்று நாட்டினார்.
-
தேசிய பங்கு சந்தையில் இணைந்த வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்
25 Mar 2023திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் முதல் நாளே இந்த நிறுவனத்தின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகியுள்ளத -
மாநிலங்கள் கல்வி தரத்தை உயர்த்தி கொள்ள உரிமை வழங்க வேண்டும் : மத்திய அரசுக்கு அமைச்சர் பொன்முடி கோரிக்கை
25 Mar 2023சென்னை : மாநிலங்கள் கல்வி தரத்தை உயர்த்தி கொள்ள உரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு என்.எல்.சி. நிறுவனம் தேவையில்லை : அன்புமணி ராமதாஸ் பேட்டி
25 Mar 2023கடலூர் : என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதே எங்களுடைய கோரிக்கை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ காலமானார் : சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் இரங்கல்
25 Mar 2023நியூயார்க் : இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ தனது 94 வயதில் காலமானார்.
-
தமிழகத்தின் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
25 Mar 2023சென்னை : தமிழகத்தின் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இண்டிகோ விமானத்தில் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் தம்பதியருக்கு பாராட்டு
25 Mar 2023கோவை : ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தின் நாயகர்களாக அறியப்படும் பொம்மன், பெள்ளி தம்பதியர் இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளனர்.
-
13-வது உலக மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவின் போரா, நிது தங்கம் வென்று சாதனை
25 Mar 2023டெல்லி : சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் ஸ்வீட்டி போரா மற்றும் நிதி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
-
ஆன்லைன் ரம்மியால் திருச்சியில் ஊழியர் ஒருவர் தற்கொலை
25 Mar 2023திருச்சி : திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
நாட்டில் தினசரி பாதிப்பு உயர்வு: கொரோனா பரிசோதனையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தல்
25 Mar 2023புதுடெல்லி : நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு மீண்டும் கடிதம் மூலம் அற
-
தொடர்ந்து கேள்வி கேட்பேன்: ஜனநாயகத்திற்கான தனது போராட்டமும் தொடரும் : டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி
25 Mar 2023புதுடெல்லி : அரசுக்கு எதிரான தனது கேள்விகளும், ஜனநாயகத்திற்கான தனது போராட்டமும் தொடரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.